rudrateswarar

rudrateswarar

Saturday, March 2, 2013

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது

                                                          ஓம் நமசிவாய 

 

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது 

1.நமசிவாய - தூல ஐந்தெழுத்து  
2.சிவாய நம - சூக்கும ஐந்தெழுத்து
3.சிவயசிவ  - அதி சூக்கும ஐந்தெழுத்து 
4.சிவசிவ    - காரண ஐந்தெழுத்து 
5. சி - மகா காரண ஐந்தெழுத்து

ஓம் சிவசிவ ஓம் ஜெபம் பண்ண சொல்பவர் கள்  அதற்கு கொடுக்கும் பிரமாணம் என்ன ? ஏதாவது திருமுறைகளிலோ அல்லது மெய் கண்ட சாத்திரங்களிலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எதை வைத்து அதை நம்புவது ?
ஓம் நமசிவாய ஜெபம் பண்ண தீட்சை பெற வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வாதம் வாகனம் ஓட்ட உரிமம் வேண்டும் என்றால் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அதை விடுத்து காவலர்கள் இல்லாத வழியில் அழைத்து செல்கிறேன் என்பது போல் உள்ளது இவர்கள் செய்யும் இச்செயல் நம் முன்னோர் சமயகுரவர்கள் நால்வர் சம்பந்தர்பெருமான் அப்பர்சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசக சுவாமிகள் மற்றும் சந்தான  குரவர்கள்  நால்வர் மெய்கண்டார் , அருள்நந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர் உமாபதிசிவம் ஆகியோர் அருளியது பொய்  என்று சொல்லுவது போல் உள்ளது இவர்கள் வாக்கினை எனதுரை தனதுரையாக சிவபெருமானே ஏற்றுக்கொண்டுள்ளார் நமது சமயத்தில் இவர்கள் அருளியது சிவபெருமான் அருளியது போலவாகும் இவர்கள்  வாக்கே பிரமாணம் ஆகும் .
வேதத்தையும்  பதினென் புராணங்களையும் நமக்கு தொகுத்தளித்த  வியாச மாமுனிவர் வார்த்தைகளே நமக்கு நம் சைவத்தில் பிரமாணம் இல்லை .அப்படி இருக்கும் போது அவர்களை மிஞ்சிய ஞானிகள் யார் உளர் ?
ஓம் நமசிவாய ஜெபம் பண்ண சமய தீட்சை ஒன்றே போதும் ,சிவாயநம ஜெபிக்க அடுத்த கட்டமான விசேட தீட்சை பெற வேண்டும், சிவயசிவ ஜெபிக்க அதற்கும் அடுத்த கட்டமான நிர்வாண தீட்சை பெற்று ஜெபிக்கவேண்டும்,சிவ சிவ ஜெபம் செய்ய ஆச்சார்யா அபிசேகம் பெற்ற மகான்களால் மட்டுமே முடியும் .ஏனெனில் அது முக்தி பஞ்சாட்சரம் எனப்படும் .அதாவது துறவு நிலை உள்ளவர்களும் இனி உலக வாழ்க்கையில் கடமை இல்லை என்பவர்களும் ஜெபிக்க வேண்டிய மந்திரம், சிவசிவ மந்திரத்திற்கு ஓம் எனும் பிரணவம் சேர்க்க வேண்டியதில்லை .
ஓம் சிவ சிவஒம்  நூற்றுக்கணக்கில் ஜெபிக்க வேண்டுமாம் ஆனால் ஓம் நமசிவாய 108 முறை ஜெபித்தால் போதும் ,ஏனெனில் நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கின் றோம் அதில் இரவு உறக்கம் போக பாதி நாளுக்கு 10800 முறை சுவாசிக்கின்றோம் எனவே அதில் 100  மூச்சில் ஒரு மூச்சு என  108 முறை ஜெபித்தால் போதும் அதற்கு மேல் இல்லறவாசிகளுக்கு தேவையில்லை என்பதே பெரியோர்கள் வாக்கு .
ஏக ருத்ராட்சம் (ஒன்று ) எப்போதும் அணியவேண்டும்  சிவசின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம் அணிந்து எப்போதும் உடலில் இருக்கவேண்டும் .கையில் ஜெபம் செய்து வீட்டில்  எடுத்து வைப்பது தவறு .
மந்திர ஜபம் என்பது நம் பாவமாகிய வினை தீர்க்கவும் அடுத்து  பிறவி இல்லா நிலை பெற்று முக்தி எனும் வீடுபேறு அடையவும் இருக்கவேண்டும். காசுக்காகவோ கடன் கட்டவோ கார் வாங்கவோ அல்ல ,ஆன்மிகம் என்பது ஆன்மா நற்கதி பெறவே .


காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே      -     சம்பந்தர்





சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.  -     அப்பர்




மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்சொல்லும்நா நமச்சி வாயவே.
                                                                                          -   சுந்தரர்                



போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய சயசயபோற்றிபோற்றி


                                                                        -மாணிக்கவாசகர்



இது போன்று www.thevaaram.org காரண பஞ்சாக்கரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

எவ்வளவோ காரணங்களை முன்னிட்டு மக்கள் எதிர்பார்ப்புகளோடு பிரார்த்திப்பார்கள் சரியான படி நிரூபணம் இல்லாத பிரமாணம் இல்லாத ஒரு மந்திரம் கண்டுபிடித்து ஆளாளுக்கு தான் பேர் வாங்க இது ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பு அல்ல இறை நம்பிக்கை மக்களின் நம்பிக்கை ஆன்மீகம் என்பது மக்களின் ஆன்மாவோடு ஒன்றியது நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லக்கூடாத உதாரணம் யூத மதத்தில் பிறந்த இயேசு புது மதம் உருவாக்கியது போல் உள்ளது

சிவஞானபோதம் 9 ஆம் சூத்திரம், சிவஞான சித்தியார் சிவபிரகாசம் திருவருட்பயன் என 14 சாத்திரங்களுமே பஞ்சாக்கரத்தின் மேன்மையை எடுத்து கூறுகின்றன

முதல் வகுப்பு படிக்காமல் ஆராய்ச்சி படிப்பு போல் உள்ளது மக்கள் போலி சாமியார்கள் பிடியில் இருந்து தப்பி பிழைப்பதே அரிதாக உள்ள நிலையில் தவறான மந்திரமே அலைக் கழிக்கும் .

நமசிவாய என்பது 36 தத்துவங்களையும் கடந்த சதாசிவமூர்த்தியின் மூலமந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனை அதிதெய்வமாக கொண்டது

மேற்சொன்ன காரணங்களால் தான் ஓம்சிவசிவஓம் என்பது நம்பிக்கைக்கு உகந்த மந்திரம் அல்ல அது முடிவான முடிவை கொண்ட சைவ சமயத்தின் சிவபெருமானின் மந்திரம் அல்ல






                          போற்றி ஓம் நமசிவாய




                            திருச்சிற்றம்பலம்



12 comments:

  1. ஓம் சிவசிவ ஓம்

    வணக்கம்! அன்பரே! தங்கள் பதிவு அருமை. ஓம் சிவசிவ ஓம் ஜெபிக்க கூடாது என்பதற்க்கு சரியான காரணம் இருந்தால் சொல்லவும். “சிவ சிவ என்கிலர் தீவினையாளர்” என்பதன் விளக்கம்தான் என்ன? எல்லா கோவில்களிலும் “சிவசிவ” என ஏன் எழுதி வைத்துள்ளார்கள். எனக்கும் தெரியாது. சொல்லுங்கள். சரியாக இருக்கும் போது ஏற்றுக் கொள்கிறேன்.
    ஓம் சிவசிவ ஓம்

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமசிவாய





      சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்

      சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச்

      சிவசிவ வாய தெளிவினுள் ளார்கள்

      சிவசிவ வாகும் திருவருளுமே .

      வாய் பேசாத மௌனிகளும் சிவசிவ என்று எண்ணுவதில் உள்ள நன்மையை அறியமாட்டார் .சிவசிவ என்று எண்ணுவதுடன் மூச்சின் கதியும் இயங்காமல் லயம் அடையும் .அப்படி அடைய சிவமும் சத்தியும் ஆகிய மகாமனுவைத் தெளிந்தவர்கள் திருவருள் பெற்று சிவமாவார்கள் .

      சிவசிவ என்கிலர் தீவினையாளர்

      சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

      சிவசிவ என்றிடத் தேவருமாவர்

      சிவசிவ என்னச் சிவா கதி தானே



      முற்பிறவியில் செய்த தீவினைகள் காரணமாக சிவசிவ என்று ஓதாமல் உள்ளனர் எத்தகைய தீவினையாளரும் சிவசிவ எனச் சொல்வாராயின் தீயவினைகள் கெட்டு சிவ முத்தியாகும் .மேலும் அவர்கள் தேவ உடல் பெற்று விளங்குவர் .சிவசிவ என்று கணிப்பதால் சிவகதி உண்டாகும்.



      சிவாலயங்களில் சிவசிவ என்று எழுதியிருப்பதன் அர்த்தம் உயிர்கள் அனைத்தும் சிவ சிந்தனை சிவ பூஜை மூலம் மிக உயர்ந்த சிவகதி பெற்று ஆன்மா உய்வு பெறவேண்டும் என்பதே .அதனால் தான் கோபுர உச்சத்தில் வைக்கும் நோக்கம் .கோபரமே தூல லிங்கமாகும்



      இன்னும் சொல்லப்போனால் ஆச்சார்ய அபிசேக நிலையில் தீட்சை செய்து வைக்கும் முற்றும் துறந்தவர்களும் பூவுலக இன்பங்களை ஒதுக்கி உள்ளவர்களும் முக்தியை எதிர்நோக்கி மாடுட கடமை முடிந்தவர்களும் ஜெபம் பெறலாம் எனவே முதலில் ஓம் நமசிவாய ,சிவாயநம ,சிவயசிவ ,சிவசிவ ,சி என படிப்படியாக செல்லலாம் .

      திருமூலர் திருமந்திரத்தில் 9ஆம் தந்திரம் 2715,2716 ஆகிய பாடல்கள் இவை.இது 10 ஆம் திருமுறை .



      திருமுறைகளை ஓதுங்கள் பொருள் சொல்லாதீர்கள் என பெரியவர்கள் சொல்லும் பொருள் ,தப்பான அர்த்தம் கொள்ளப்படும் என்பதனால் தான் .

      நான் குரு முதல்வர்கள் நால்வரின் பாடல்களை பதிவிட்டிருந்தேன் ,தாங்கள் பாடல் மூலம் விளக்கம் கேட்டதற்கு நன்றி ,

      குருவருளும் திருவருளும் கிட்டட்டும் .

      போற்றி ஓம் நமசிவாய

      Delete
    2. தாங்கள் சொன்னது உண்மை பணத்திற்க்காக கடவுளையே ஏசும் கூட்டம் இது

      Delete
  2. "வாகனம் ஓட்ட உரிமம் வேண்டும் என்றால் பெற்றுக்கொள்வதில் தவறில்லை.அதை விடுத்து காவலர்கள் இல்லாத வழியில் அழைத்து செல்கிறேன் என்பது போல் உள்ளது "

    நல்ல உதாரணம்.

    ஆனால் உரிமம் பெறாமலேயே ஒட்டக்கூடிய வாகனமும் (சைக்கிள்) உண்டு.

    எனவே "ஓம் சிவ சிவ ஓம்" ஜபிப்பதால் எந்த தவறும் இல்லை, தீமையும் இல்லை.

    தாராளமாக தீட்சை பெறாத அனைவரும் "ஓம் சிவ சிவ ஓம்" ஜபிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. போற்றி ஓம் நமசிவாய



      பதிவை படித்தமைக்கு நன்றி .சைக்கிளுக்கும் ஒரு காலத்தில் கட்டுப்பாடு உண்டு இரண்டு பேர் செல்லக்கூடாது ,விளக்கு பொருத்தாமல் ஓட்டக்கூடாது .அந்த வழக்கம் மாறலாம் இறை மந்திரம் மாற்றத்தக்கதா ?.பன்னிரண்டு திருமுறைகளில் திருமூலர் மட்டுமே ஒரே இடத்தில் மட்டும் சிவசிவ என்று பாடியுள்ளார் .அது முக்தி பஞ்சாட்சரம் துறவியும் வாழ்ந்து முடித்தவனும் ஓத வேண்டியது .அந்த 14 ஆவது கேள்விய கேளுங்க பாஸ் பதிவை படித்தால் புரியும் .இந்த மந்திரத்திற்கு ஒருத்தர் நியூமராலஜி போட்டு விளக்கம் அளித்துள்ளார் .கூட்டுத் தொகை இப்படி வருகிறது எனவே நல்லது என்று .இந்த நமசிவாய சிவாயநம மட்டும் திருமுறைகளில் எவ்வளவு இடங்களில் இன்ன இன்ன பயன் என்று தெளிவாக உள்ளது சைவ குருமார்களின் வார்த்தைக்கு அப்புறம் என்ன இருக்கிறது ? PROOVEN RESULT இருக்க கனியிருக்க காய் ஏன் ?



      சிவசிவ என்பது முக்தி பஞ்சாட்சரம் அது கூட ஓம் என்ற பிரணவம் சேர்த்தால் எப்படி அதன் தன்மை மாறும் .கோயில்களில் சிவசிவ என எழுதியுள்ளதன் நோக்கமே உயிர்கள் பிறவாத தன்மை எய்தி இறைவனடி சேரவேண்டும் என்பதற்காகவே .அஞ்செழுத்து என்பது மிக உயர்ந்த மந்திரம் .63 நாயன் மார்களில் 2 பேர் மட்டுமே துறவிகள் மற்ற அனைவருமே இல்லறவாசிகள் சமய குரவர்கள் நால்வர் சொன்னதே வேதம் . சந்தான குரவர் நால்வர் சொன்னதே ஆகமம் .அவர்கள் சொன்னதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை.

      ஆன்மீகம் என்பது ஆன்மாவை மீட்டெடுப்பது என்று தான் அர்த்தம் .இது சைவத்திற்கு இருண்ட காலம் அஞ்செழுத்து கொடுக்காத, திருமுறைகள் கொடுக்காத எதையும் வேறு எதுவும் கொடுக்காது ஓம் நமசிவாய தினம் 108 முறை ஒரு 15 நாட்கள் சொல்லி பாருங்கள் அதன் அற்புதத்தை .ஒரு லட்சம் தடவை எல்லாம் தேவையில்லை .நம் சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் என எல்லா வினைகளும் ஓடிவிடும் .சைவ சித்தாந்தம் படியுங்கள் எல்லாம் புரியும் .

      போற்றி ஓம் நமசிவாய

      Delete
    2. ஓம் சிவ சிவ ஓம்

      என்ற மந்திரத்தை நம் சமய குரவர்கள் யார் உரைத்தனர் சைவ சமய இலக்கியங்களில் இம் மந்திரம் உண்டா?
      ஒரு குரு சொல்கிறார் சிவசிவ என்றால் கேடு நேருமாம் சிவ.ஆளவந்தான் ஐயா இன்றைய பல குருமார்கள் தன் சொந்த கற்பனைகளை சைவப்பெருநெறியில் புகுத்துகிறார்கள் அவை ஏற்புடையது அல்ல நான் என்னிடம் சமய வகுப்பிற்கு வரும் மாணக்கர்களிடத்து "ஓம் சிவ நம சிவ ஓம்" என்றே சொல்ல வேண்டும் என என் கருத்தை உட்புகுத்தலாம் அவை பாவம் நம் சமய குரவர்கள் காட்டிய நெறியை பின்பற்றுங்கள் ஐயா விதண்டா வாதம் தவிர்ப்போமே

      Delete
  3. https://www.youtube.com/watch?v=82NoI29Wy1k
    வள்ளலார்
    பெருமானாரின் வாழ்க்கை விளக்கம் - அரிய செய்திகள்
    thirugnasampanthar devaram, 1 - thirumurai, padal- 1419
    திருஞானசம்பந்தர் அருளிய முதல் தேவாரம்-பாடல் -1419-
    காரைக்கால் அம்மையார் -பாடல் - 48 (அற்புத திரு அந்தாதி -பாடல் - 05 )

    ReplyDelete
  4. தீட்சை பெறாதவர்கள் நமச்சிவாய என்று உச்சாடனம் செய்யலாம், சான்று மாணிக்கவாசகரின் நமச்சிவாய பதிகம்.

    ReplyDelete
  5. எல்லா குருவுக்கும் மாணவர்கள் இருப்பதில்லை.. அது தெரியுமா இங்கு பலருக்கு...

    ”பரைக்குமே குருமார்கள் பணமுங்கேட்பார்
    பதிவாக பொருள்பிடுங்கி யுண்பார்பாரு
    திரைக்குள்ளே உள்ளிருத்தி மனிதருக்கு
    தீட்சைதா னஞ்செழுத்தை சொல்வாரப்பா
    மரைத்துமே நம்பவே வேண்டாமப்பா”

    கண்ணைத் திறப்பது காதை திறப்பது இதெல்லாம் வியாபார உத்திகள்.... இதில் எந்த பலனும் இல்லை.

    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. அதைத்தான் தீட்சை என்றார்கள் சான்றோர்கள்..

    அதில் மந்திர தீட்சை என்ற விடயம் எல்லாம் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது..

    ReplyDelete
    Replies
    1. இறைவனே எல்லார்க்கும் ஆதி குரு.

      நயந்து அழையுங்கள்,

      உள்ளிருப்பவன் தோன்றி உணர்த்துவார்.

      நல் நெறியில் கூடிய அடியார்களுடன் மட்டும் இறையை சித்தித்திருங்கள்.

      அன்பினால் கட்டுங்கள் இறை அருளை.

      உள்ளிருந்தே வழி நடத்துவார்.

      தடுமாறும் பொழுது ஆகமத்தை துனை கொள்ளுங்கள்.

      சிவாயநம.

      Delete
  6. சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே

    ReplyDelete
  7. சிவாயவசி என்று ஜபிக்கலாமா...?

    ReplyDelete